தமிழ்மன்றம்
பொறியியல் துறையிலும் தமிழ் மணம் பரப்ப எம் கல்லூரியில் 30.07.2014 அன்று ரோட்ரியன்.எஸ்.சேதுபதி அவர்களின் தலைமையில் தமிழ் மன்றம் துவங்கப்பட்டது.தமிழ் மன்றம் வாயிலாக மாணவ/மாணவியர் எம் கல்லூரியிலும்/பிற கல்லூரிகளிலும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளும்,சான்றிதழ்களும் வென்றுள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கவிதை போட்டியில் எம் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர் ம.மணிகண்டன் முதல் பரிசும், 10,000 ரூபாய் ரொக்கப்பரிசும் பெற்றுள்ளார்.
- உலகத் திருக்குறள் பேரவை சார்பாக நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் எம் கல்லூரியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு கட்டிடவியல் துறை மாணவர் மு.நவீன் மாவட்ட அளவில் முதல் பரிசும், 500 ரூபாய் ரொக்கப்பரிசும் பெற்றுள்ளார்.
- கவியரசர் கலைத் தமிழ்ச் சங்கம் சார்பாக நாமக்கலில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் எம் கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை மாணவி தி.நிவேதா மாநில அளவில் ஐந்தாம் இடம் பெற்றுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர் :
மு.உமா தேவி
இணை ஒருங்கிணைப்பாளர் :
மீ.சமீரா
செயலாளர் :
சு.விக்னேஷ் குமார் (மூன்றாம் ஆண்டு கட்டிடவியல் துறை)
இணைச்செயலாளர் :
உ.கபிலன் (மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை)
பொருளாளர் :
கு.அறிவழகன் (மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறை)
நிர்வாக உறுப்பினர் :
- ரா.மாலதி (இரண்டாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை )
- நா.திவ்ய பாரதி (மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை)
02.02.2015 அன்று சிறகை விரி!! சிகரம் தொடு!!! என்ற தலைப்பில் திரு.சி.சையத் அப்தாகீர் அவர்கள் மாணவ/மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.